நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்

நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்
X

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

இன்று அதிகாலையில் பெய்த பலத்த மழையினால் பள்ளியில் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இன்று அதிகாலையில் பெய்த பலத்த மழையினால் பள்ளியில் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களை ஆய்வு செய்தும் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில், பள்ளியின் தலைமையாசிரியர் விஜய மாணிக்கம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் க.நைனாமுகமது மற்றும் திமுக நிர்வாகிகள் எம்.எம் பாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture