புதுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பலர் பங்கேற்பு

புதுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பலர் பங்கேற்பு
X

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார்

புதுக்கோட்டையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில், ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று, சமூக நலத்துறை மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து, பாலின சமத்துவ விழிப்புணர்வை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மினி மாரத்தான் போட்டியானது, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து துவங்கி, புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை, பி எல் ஏ ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இந்த மினி மாரத்தான் போட்டியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

இந்த மாரத்தான் போட்டியில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுக்காக பாலின சமத்துவ விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு