மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை வேட்பாளர் திமுகவில் இணைய முடிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை வேட்பாளர்  திமுகவில் இணைய முடிவு
X

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி மூர்த்திக்கு திமுக உறுப்பினர் படிவத்தை வழங்கினார்

செப்.12-இல் புதுக்கோட்டைக்கு வரும் உதயநிதிஸ்டாலின் முன்னிலையில் கட்சி நிர்வாகிகளுடன் திமுகவில் இணையவுள்ளார்

புதுக்கோட்டை தொகுதியில் மக்கள்நீதிமய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திக்மெஸ்மூர்த்தி திமுகவில் இணையவுள்ளார்.

நடிகர் கமலஹாசன் தன்னுடைய நற்பணி மன்றங்களை ஒன்றிணைத்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன், கோயம்புத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அவருடைய கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட தோல்வியடைந்த நிலையில் புதுக்கோட்டையில் சமூக ஆர்வலரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான மூர்த்தி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளுக்கிடையே மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மூர்த்தி தீவிர பிரசாரம் செய்தும், குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்வி எதிரொலியாக கட்சி கலகலத்துப்போனது. முக்கியத் தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணியாற்றி வந்த மூர்த்தி, இன்று மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா தலைமையில் வருகின்ற 12-ஆம் தேதி புதுக்கோட்டைக்கு வருகை தரும், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திமுகவின் இணைவதற்கான திமுக உறுப்பினர் படிவத்தை இன்று பெற்றுக்கொண்டார். புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர் திமுகவில் இணைய இருப்பது மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story