புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.மேலும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சென்ற வாரம் பூச்சொரிதல் விழாவுடன் திருவிழா துவங்கியது. நார்த்தாமலை தேரோட்டத்தை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தினமும் பக்தர்கள் பால்குடம் காவடி உள்ளிட்ட வேறு நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக கருதப்படும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்வு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விதமாக வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu