விசைப்படகில் தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்துவதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார்

விசைப்படகில் தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்துவதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார்
X

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் அனைத்து நாட்டு படகு மீனவர்கள் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூறினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் செய்தும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் மேலும் மாவட்டத்தில் உள்ள 32 மீனவ கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்

இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் ஐந்து நாட்டிக்கல் மைல் அப்பால் தான் மீன் பிடிக்க வேண்டும் என்று விதி மேலும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தக் கூடாது என்பதும் சட்டமாக உள்ளது. இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி, இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்திலேயே மீன் பிடிப்பதால், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள், விசைப்படகு மீனவர்கள் அத்துமீறலை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த நாட்டுப்படகு மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கடற்கரை கிராமங்களில் விசைப்படகு மீனவர்களுக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கும் உள்ள பிரச்னை குறித்தும் விசைப்படகு மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்கள் எவ்வாறு வாழ்வாதாரத்தை பாதித்துள்ளனர் என்பது குறித்தும் எடுத்துக் கூறினர். அத்துமீறலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாகவும் கொடுத்துள்ளனர்.

இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிழக்கு கடற்கரை சாலையில் அனைத்து நாட்டு படகு மீனவர்கள் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!