அக்காள் மகளிடம் பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

அக்காள் மகளிடம் பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
X

போலீஸ் பாதுகாப்பில் முருகேசன் உள்ளார்.

அக்காள் மகளிடம் பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கணக்கன்காட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது35) கூலி தொழிலாளி.

இவரது அக்கா தமிழரசிக்கு திருமணமாகி பட்டுக்கோட்டை தாலுகா பூவானம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் முருகேசனின் தாயார் பாக்கியத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை கவனித்துக்கொள்ள தமிழரசி தனது மகளை கணக்கன்காட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் தமிழாசியின் தம்பி முருகேசன் தனது அக்கா மகளிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் முருகேசன் தனது அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் முருகேசனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் அஞ்சம்மாள் என்ற பெண்னுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் முருகேசன் நெருக்கமாக இருந்து வந்ததை தொடர்ந்து அஞ்சம்மாள் கர்ப்பமானார்.

இது குறித்து அஞ்சம்மாளின் வீட்டிற்கு தெரியவந்ததை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் முருகேசன் தனது அக்கா மகளை திருமணம் செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியியல் வன்கொடுமை செய்துவிட்டு தற்போது முருகேசனுக்கு வேறு பெண்ணுடன் திருமாணமானதை அறிந்த தமிழரசி இது குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இன்று இந்த வழக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா முன் விசாரனைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா தனது சொந்த அக்கா மகளை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த முருகேசனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட தமிழரசியின் மகளுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!