புதுக்கோட்டையில் 3 கடைகளுக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்

புதுக்கோட்டையில் 3 கடைகளுக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்
X
புதுக்கோட்டையில் கொரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 3 கடைகளை அடைத்து கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில் கடைவீதி பகுதிகளில் பாத்திரக் கடை ஜவுளிக்கடை இரண்டு கடைகளும் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்து விற்பனையில் ஈடுப்ட்டனர்..

தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் நோய்தொற்று பரவக்கூடிய சூழ்நிலையிலும் விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டாட்சியர் டெய்சி குமார், தாசில்தார் முருகப்பன், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்

அதேபோல் வீட்டிற்குள்ளேயே செல் போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்து வந்த ஒரு கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்

தொடர்ந்து தமிழக அரசு அறிவித்துள்ளபடி முழு ஊரடங்கி பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் இது போன்று கடைகள் திறந்து விற்பனை செய்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் டெய்சி குமார் எச்சரித்தார்

Tags

Next Story