புதுக்கோட்டை: மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு

புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது.
சுதந்திரத்திற்கு முன்னர் நமது நாடு மன்னர்களால் ஆளப்பட்டபோது புதுக்கோட்டை சமஸ்தானம் பிரசித்தி பெற்ற ஒரு ராஜியமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்ததும் சர்தார் வல்லபாய் பட்டேல் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்தியா முழுவதும் உள்ள மன்னர்களும் தங்களது ராஜியங்களை மத்திய அரசுடன் இணைத்தனர்.
அந்த கால கட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்டு வந்த மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் இந்திய அரசுடன் தனது சமஸ்தானத்தை இணைத்தார். 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்துடன் தனது அரண்மனையை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வழங்கினார் மாமன்னர் ஆர்.ராஜகோபாலத் தொண்டைமான்.
புதுக்கோட்டை மக்கள் இன்றளவும் மன்னர் குடும்பத்தினரை ராஜாவின் வாரிசுகளாகவே கருதி உரிய மரியாதை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாமன்னர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சீனு.சின்னப்பா தலைமையில் விழாக்குழு அமைக்கப் பெற்று ஜூன் மாதம் நான்கு நாட்கள் புதுக்கோட்டையில் விழாக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காககவிஞர் ரா.சம்பத்குமாரை செயலாளராக கொண்ட விழாக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu