புதுக்கோட்டை அடுத்த மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா: 600 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை அடுத்த மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா: 600 காளைகள் பங்கேற்பு
X

ஆலங்குடி அருகே மங்கலாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களை மிரட்டிய ஜல்லிக்கட்டு காளைகள்.

புதுக்கோட்டை அருகே மங்களாபுரம் முனி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது

புதுக்கோட்டை அருகே மங்களாபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா முனி கோவில் திடலில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 650க்கும் மேற்பட்ட காளைகளும் அதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடின இதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப் பாய்ந்து ஓடின.

இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா