நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
X

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கிய வீரருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியில் மிகவும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டியாக மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் மற்ற மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம் ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கோவில் பண்டிகை மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நூற்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வருடம் அதிகமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இன்று மிகவும் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நார்த்தாமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது .

ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் மாரிமுத்து, போஸ், மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா உள்ளிட்டோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர்.இந்த போட்டியில் புதுக்கோட்டை சிவகங்கை தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை வந்துள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு வீரர்கள் உறுதி மொழியுடன் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு விழா கமிட்டி சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் வீரர்களின் பிடியிலிருந்து சிக்காமல் செல்லும் காளைகளுக்கும் பல்வேறு வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது .

ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் மற்றும் வீரர்களுக்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!