நிபா - ஜிகா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் ஆய்வு செய்தனர்
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 13 லட்சத்து 44 ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்வதற்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறிய கருத்து ஏற்புடையது. நான்கு மருத்துவக் கல்லூரிகளில் குறைபாடுகள் சரி செய்யப்பட்டு மத்திய அரசிடம் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது ஏற்கெனவே 850 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 800 மாணவர் சேர்க்கைக்கான அனுமதி இந்த ஆண்டே பெறப்படும்.
ஐந்து மாவட்டங்களில் மழையின் காரணமாக தடுப்பூசி முகாம் பணிதொய்வாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 62 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் இரண்டாவது தவணை 20 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ளது மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்புஇருப்பினும் மூன்றாவது அலை வந்தால் அதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது
70 சதவீதம் பேர் முதல் தவணை போட்டுக்கொண்டதால் மூன்றாவது அலை வந்தாலும் பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது 62 சதவீதம் பேர் முதல் தவணை தமிழகத்தை போட்டுக்கொண்டுள்ளனர் மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடும் பணி வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாமை மூலமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அக்டோபர் மாதத்தில் ஒன்றரை கோடி தடுப்பூசி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகம் தடுப்பூசி போடுவது மத்திய அரசு பாராட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த மாதத்திற்கு மத்திய அரசு ஒரு கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்குவதாக உறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வருவது வழக்கம் சுகாதாரத்துறை யோடு உள்ளாட்சித்துறை இணைந்து அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட டெங்கு ஒழிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
நிபா மற்றும் ஜி கா வைரஸை தடுப் பதற்காக எல்லையோரங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.13 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தொய்வு என்று கூறமுடியாது வேகமாக அந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் போட்டுள்ளது. ராஜன் குழு பரிந்துரையின் அடிப்படை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.போராட்டம் நடத்துவதால் பயனில்லை என்று கூறவில்லை. போராட்டம் நடத்துவதற்கு முன்பு போராட்டம் நடத்தினால் வெற்றி கிடைக்குமா என்பதை உணர்ந்து போராட வேண்டும் என்றுதான் நான் கூறினேன்.
மூன்று மாதத்திற்கு முன்பு கொரோனா ஒழிப்பு பணியில் தற்காலிக பணியாளர்களாக சேர்ந்தவர்கள், பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களை, நிரந்தரம் செய்ய முடியாத நிலையில், மூன்று மாதத்திற்கு முன்பாக பணியில் சேர்ந்தவர்கள் எவ்வாறு பணிநிரந்தரம் செய்ய முடியும் என்றுதான் நான் கூறினேன்.அதனால் தான் இந்த போராட்டத்தை ஒரு சிலர் தூண்டி விடுகிறார்கள் என்று கூறினேன்.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறும் கருத்து ஏற்புடையது. போராட்டம் நடத்துவதை யாரும் குறைகூற முடியாது. குடியரசுத் தலைவர் தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை, மறுக்க முடியாத வகையில் அறிக்கை அவருக்கு அனுப்பியுள்ளோம். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்.
இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு புதிய 11 மருத்துவ கல்லூரி ஆயிரத்து 650 சீட்டுகள் வரவேண்டும். ஏற்கெனவே 850 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 4 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில குறைபாடுகளை அவர்கள் கூறினார்கள். அதையும் சரி செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். எனவே, இந்த ஆண்டு கூடுதலாக 1650 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கட்டாயம் பெறப்படும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் செந்தில்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, அர்ஜுன், சுகாதார பணியாளர்கள் நகராட்சி பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu