புதுக்கோட்டையில் விரட்டி விரட்டி கொரோன பரிசோதனை

புதுக்கோட்டையில் விரட்டி விரட்டி கொரோன பரிசோதனை
X
புதுக்கோட்டையில் விரட்டி விரட்டி கொரோன பரிசோதனை செய்யப்படுகிறது,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோன தொற்று அதிகரித்து வருகிறது அதே போல் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கொரோன பரிசோதனையை செய்வதை அதிகரித்து வருகிறார்கள்.

அதேபோல் முகக்கவசம் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கட்டாயம் கொரோன பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளுக்குநாள் வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இன்று மட்டும் கொரோன வைரஸ் தொற்று பாதிப்பு இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்று பழைய பேருந்து நிலையத்தில் முககவசம் அணியாமல் வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் 3 பேர் வருபவர்கள் சரக்கு வாகனம் லாரி போன்ற வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் என துரத்தி துரத்தி நகராட்சி அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொண்டு வந்தனர் தொடர்ந்து சாலைகளில் முகக் கவசம் அணியாமல் நடந்து வருபவர்களுக்கும் கட்டாய பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story