உள்கட்சித்தேர்தல்: மாவட்ட திமுக அலுவலகத்தில் குவிந்த திமுக நிர்வாகிகள்

உள்கட்சித்தேர்தல்:  மாவட்ட திமுக அலுவலகத்தில்   குவிந்த திமுக நிர்வாகிகள்
X

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் 15வது திமுக கழக பொது தேர்தலை முன்னிட்டு   புதுக்கோட்டை நகர பகுதியில்   போட்டியிடுவதற்காக திமுக.   நிர்வாகிகளிடம் விருப்ப மனுவை   பெற்ற தேர்தல் நடத்தும்    பொறுப்பாளர்கள் முத்துசாமி    மற்றும் தாமரைச்செல்வன்

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக நிர்வாகிகள் குவிந்தனர்

தமிழகம் முழுவதும் திமுக தலைமை கழகம் 15வது கழக பொது தேர்தலை அறிவித்து. அதன்படி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களை அறிவித்து தேர்தல் நடத்தும் பணியை தீவிரமாக திமுக தலைமை கழகம் நடத்தி வருகிறது.

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரம் மற்றும் பேரூராட்சி வட்ட கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுவதற்கான விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் பொறுப்பாளராக முத்துசாமி மற்றும் தர்மபுரி முன்னாள் எம்பி தாமரைச்செல்வன் ஆகியோர் தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று வருகை தந்த தேர்தல் நடத்த பொறுப்பாளர்கள் கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து திமுக அலுவலகத்தில் நகரம் மற்றும் பேரூராட்சி வட்ட கழகத்தின் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா, மாவட்ட பொருளாளர் செந்தில், செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, நகர கழக செயலாளர் நைனா முகமது உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்