வீட்டுவரி ரசீது, ரேஷன் கார்டு ஒப்படைப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை; பாெதுமக்கள் ஆவேசம்!

வீட்டுவரி ரசீது, ரேஷன் கார்டு ஒப்படைப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை;  பாெதுமக்கள் ஆவேசம்!
X

வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து வீட்டு வரி ரசீது மற்றும் ரேஷன் கார்டுகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு வரி ரசீது மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை இன்று ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே 90 வருடங்களுக்கு மேலாக குடியிருந்த வருபவர்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு வரி ரசீது மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை இன்று ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீழே சாம்பல் மனை குடியிருப்புப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 90 வருடங்களுக்கு மேலாக அங்கு குடியிருந்து வருகின்றனர் இவர்களுக்கு தமிழக அரசால் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது ரேஷன் கார்டு அந்த முகவரியில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் குடியிருந்து வரும் வீட்டு மனைகளுக்கு பட்டா மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.

பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தங்களது ரேஷன் கார்டு மற்றும் வீட்டு வரி ரசீது ஆகியவற்றை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக அவர்களை அழைத்துச் சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா