காற்றில் பறந்த காவல் உதவி மையம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

காற்றில் பறந்த காவல் உதவி மையம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
X

புதுக்கோட்டையில் நேற்று இரவில் வீசிய பலத்த காற்றில் அண்ணாசிலை அருகே சேதமடைந்த காவல் உதவி மையம்

காவல் உதவிமைய பெட்டி காற்றில் பறந்து வந்தபோது சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

புதுக்கோட்டை நகரில் நேற்று இரவு பெய்த கனமழையின்போது பலத்தகாற்று வீசியதில் பறந்த காவல் உதவி மையத்தின் பெட்டி பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்வதற்கு உதவியாக காவல் உதவி மையங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன இவைகள் ரெடிமேடாக கூண்டு போன்று வைக்கப்பட்டு அதில் போக்குவரத்து விதிகள் எழுதிய பதாதைகள் மற்றும் விளம்பரப் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை நகரில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை பெய்த மழை இன்று அதிகாலை வரை நீடித்தது.அவ்வப்போது காற்றுடன் மழை பெய்த நிலையில், புதுக்கோட்டை நகரில் காவல் துறையால் பழைய பேருந்து நிலையம், பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த காவல் உதவி மைய கூண்டுகள் காற்றில் பறந்து கீழே விழுந்தது. நள்ளிரவு நேரமாக இருந்ததால், பொதுமக்கள் நடமாட்டம் சாலைகளில் இல்லை. இதனால் காற்றில் பறந்து வந்த காவல் உதவி மைய பெட்டியால் பாதைகளால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும், தற்போது மழையுடன் பலத்த காற்றும் தீவிரம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்களுக்கு இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கும் வகையில் பெட்டிகள் பதாகைகள் உள்ளிட்டவைகளை உறுதித்தன்மையுடன் வைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்பதே பொதுமக்கள் matrum சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story