புதுக்கோட்டை பெருங்காகுளம் தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி

புதுக்கோட்டை பெருங்காகுளம்  தரைப்பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் அவதி
X

புதுக்கோட்டை மாவட்டம்  பெருங்காகுளம் தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காகுளம் தரைப்பாலம் மூழ்கியதால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு இடங்களில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே பெருங்களூர் அண்டக்குளம் சாலையில் உள்ள பெருங்காகுளம் தரைபாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியே மூன்று மணி நேரமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் இந்தப் பெருங்காகுளம் தரைப்பாலத்தில் எப்போது மழை வந்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டுப்பட்டி கூத்தாச்சிப்பட்டி மணவாத்திப்பட்டி குட்ட குளவாய்பட்டி லட்சுமிபுரம் மங்களத்துபட்டி என 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பகுதி வழியே செல்வதற்கு மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறோம்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த தரை பாலத்தை அகற்றி விட்டு போர்க்கால அடிப்படையில் மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சங்கர் தலைமையில 10-க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!