அரசு மகளிர் கல்லூரி விரைவில் கலைஞர் கருணாநிதி கல்லூரி என மாற்றப்படும் : ரகுபதி
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகத்தினை, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை திறந்து வைத்தார்
அரசு மகளிர் கலை கல்லூரி விரைவில் கலைஞர் கருணாநிதி கல்லூரி என பெயர் மாற்றப்படும் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகத்தினை, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கல்லூரிகளுக்கு தேiவான வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வீட்டின் கண்கள் மட்டுமல்ல நாட்டின் கண்கள்.மாணவிகள் தாங்கள் விரும்பும் படிப்பை பயில முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.பெண்களும் தங்களுக்கு தேவையான துறையை தேர்ந்தெடுத்துப் பயின்று உயர்பதவிக்கு வரவேண்டும்.அரசு மகளிர் கலைக்கல்லூரி இனிமேல் அதன் பழைய பெயராகிய கலைஞர் கருணாநிதி கல்லூரி என அழைக்கப்படுவதற்கு ஆவன செய்யப்படும்.
இக்கல்லூரியின் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நமக்கு நாமே திட்டத்தில் பணி மேற்கொள்ளப்படும்.குடற்புழு நீக்க மாத்திரையை மாணவிகள் அனைவரும் உட்கொள்ள வேண்டும்.இதன்மூலம் மாணவர்களுக்குத் தேவையான கற்றல், கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும், மாணவர்களிடையே நடத்தப்படும் தேர்வுகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். உதவி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜானகி நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu