புதுக்கோட்டையில் அரசின் வலிமை சிமெண்ட் அறிமுக விழா

புதுக்கோட்டையில்  அரசின் வலிமை சிமெண்ட் அறிமுக விழா
X

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள ஏஆர்எம் சிமெண்ட்    விற்பனை நிலையத்தில் தமிழக   அரசின் வலிமை சிமெண்ட்   அறிமுக விழா கட்டிட பொறியாளர்கள் முன்னிலையில்   அறிமுகப்படுத்தப்பட்டது 

தற்போது அரசு சார்பில் 360 ரூபாய்க்கு வலிமை சிமெண்ட் விற்கப்படுவதால் கட்டிடப் பொறியாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள ஏஆர்எம் சிமெண்ட் விற்பனை நிலையத்தில் வலிமை சிமெண்ட் விற்பனை அறிமுக விழா இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் சிமெண்டின் விலை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் நடுத்தர மக்கள் வீடு கட்டுவது கனவாகவே இருந்து வந்தது அதேபோல் கடந்த இரண்டு வருடங்களாக சிமெண்ட்யின் இந்த விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுமான பணிகளும் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக திமுக தலைவராக இருந்த ஸ்டாலின் நாங்கள் வெற்றி பெற்றால், சிமெண்ட் விலையை அரசு தீர்மானித்து அரசு மூலம் சிமெண்ட் விற்பனை செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பெற்றவுடன் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு சார்பில் வலிமை சிமெண்டை அறிமுகப்படுத்தினார். தமிழக அரசு சார்பில் விற்கப்படும் வலிமை சிமெண்டின் விலை 360 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் வலிமை சிமெண்ட் அரசு அனுமதி பெற்றுள்ள சிமெண்ட் விற்பனை நிலையத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். இதில் ஏஆர்எம் சிமெண்ட் விற்பனை நிலையத்தின் உரிமையாளர்கள் பாபு , ஷேக் மற்றும் கட்டிட பொறியாளர் சங்கத்தின் தலைவர் மதிவாணன், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சரவணன், மற்றும் நிர்வாகிகள் நல்லதம்பி, சுப்பிரமணியன், முரளி, ரவி, கருணாநிதி, உள்ளிட்ட கட்டிட பொறியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்டிட பொறியாளர் சங்கத்தின் தலைவர் மதிவாணன் கூறுகையில், தமிழக அரசு தற்பொழுது வலிமை சிமெண்டை அறிமுகப்படுத்தி கட்டிட பொறியாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து தற்போது பொங்கல் பரிசாக வலிமை சிமெண்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.இதற்காக புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கத்தின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேபோல் தொடர்ந்து சிமெண்டின் விலை அதிகரித்து கொண்டே இருந்ததால் கட்டிட பொறியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தனர். தற்போது அரசு சார்பில் 360 ரூபாய்க்கு வலிமை சிமெண்ட் விற்கப்படுவதால் கட்டிட பொறியாளர்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!