தமாகா தலைவர் ஜிகே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் வழிபாடு

தமாகா தலைவர் ஜிகே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் வழிபாடு
X

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவிலில்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு,  சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட  நிர்வாகிகள்.

ஜிகே வாசன் பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை கோவில்களில் தமாகாவினர் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்பியுமான ஜி கே வாசன் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை அக்கட்சியினர் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில் இன்று புதுக்கோட்டை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தமிழரசன் தலைமையில் சாந்தாரம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனைகள் ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஜி கே வாசன் பிறந்த நாளை கொண்டாடினார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் திருப்பதி தலைமையில் பிருந்தாவனம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள் ராமன், மனேகரன், குமாரசாமி, ராம்குமார், சண்முகம்,கனேசன் கருப்பையா, கூகூர் கனகமணி, சக்தி செல்வகுமார் ராஐசேகர் ராம்குமார் வெங்கடேன் ஆரேக்கியசாமி வெள்ளச்சாமி ஆசை நடராசன், பிச்சை உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!