அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
X
அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் செய்தார்.

கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுக அரசு மக்களுக்கு அடிப்படைப் பிரச்சனைகளை தீர்த்து வைத்ததோடு, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சி 42 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வார்டு வாரியாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் இன்று 26வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துளவத்தாமம் கலியமூர்த்தியை ஆதரித்து அம்பேத்கார்நகர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியதாவது,

அதிமுக கொடுக்கும் கட்சி, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் கட்சி, கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், அம்பேத்கார்நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நீங்கள் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துளவத்தாமம் கலியமூர்த்தியை வெற்றிபெறச் செய்தால் உங்களுடைய கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும்.

அதேபோல் தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், அதிமுக செய்த சாதனைகளை எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர் 26 வது வார்டு அதிமுக வட்டக் கழக செயலாளர் கணேசன் என்கிற கருப்பையா, துணைச்செயலாளர் பாலு என்கிற முருகராஜ், அவைத் தலைவர் முருகேசன், வட்டபொருளாளர் வெங்கடசுப்ரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், கிருஷ்ணவேணி ஜெயலட்சுமி, செந்தில்குமார், சாலமன் போஸ்கோ, வட்ட இணைச் செயலாளர் வசந்தி, துணைச்செயலாளர் வட்டக்கழக பொறுப்பாளர்கள் பிரபாகரன் ஹைதர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!