அரசு பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர்
தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி நூலகத்திற்கு ரூபாய். 7547 மதிப்பிலான புத்தகங்களை வழங்கிய முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து
அரசு உயர்நிலைப் பள்ளி நூலகத்திற்கு ரூபாய். 7547 மதிப்பிலான புத்தகங்களை முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் 54 வது தேசிய நூலக வார விழா கொண்டாடப் பட்டது. விழாவுக்கு, பள்ளியின் உதவி தலைமையாசிரியர் உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரும் மற்றும் ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலருமாகிய மாரிமுத்து பங்கேற்று அப்பள்ளி நூலகத்திற்கு ரூ.7547 மதிப்புடைய 105 புத்தகங்களை உதவி தலைமை ஆசிரியர் உதயக்குமாரிடம் வழங்கினார்.
பின்னர், முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் பேசுகையில், புத்தக வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒவ்வொரு மாணவரும் புத்தக வாசிப்பை நேசிக்க வேண்டும். மாணவர்கள் ஆசையில்லாத முயற்சியும் முயற்சியில்லாத ஆசையும் வீண். மாணவர்கள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். பள்ளி பருவத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளை எதிர்நோக்க பல நல்ல நூற்களை மாணவர்கள் கற்க முன் வர வேண்டும். நம்மை அறிந்து கொள்ள திருக்குறளை படிக்க வேண்டும்.படிக்கும் நூல்களின் பொருள் உணர்ந்து, பிறருக்கு எடுத்துரைக்குரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.
சிறப்பு நிகழ்வாக பள்ளியின் கல்விப் புரவலர் மூர்த்தி நினைவாக அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தில்லையப்பன் , பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இப்பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu