புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மாநிலங்களவை திமுக  எம்பி அப்துல்லா ஆய்வு
X

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாநிலங்களவை திமுக  எம்பி அப்துல்லா.

புதுக்கோட்டை நகராட்சி ராஜகோபாலபுரம் 4 ஆம் வீதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நகராட்சி ஆணையருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருந்து வருகிறது.மேலும் அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் உள்ள 42 வார்டுகளிலும் அதிக அளவில் சாலை வசதிகள் மற்றும் குடிநீர் பிரச்சனை இருந்து வருவதால் திமுக மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் போதெல்லாம் நகராட்சி மற்றும் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு ஒரு சில பகுதிகளை ஆய்வு செய்தும் அந்த பகுதிகளில் என்னென்ன குறைகள் இருக்கிறது என்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் சென்று கேட்டு வருகிறார்.

அதேபோல் திங்கள்கிழமை புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட ராஜகோபாலபுரம் 4ம் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் அடிப்படைப் பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்து அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்காக, நகராட்சி ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்