அதிருப்தியாளர்களை கண்டுகொள்ளாத திமுக நிர்வாகிகள்: கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

அதிருப்தியாளர்களை  கண்டுகொள்ளாத திமுக நிர்வாகிகள்: கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
X

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதியின் காரைச்சூழ்ந்து வாக்குவாரத்தில் ஈடுபட்ட வாய்ப்புக் கிடைக்காத அதிருப்தியாளர்கள்

வாய்ப்புக் கிடைக்காதவர்கள் சுயேட்சையை கட்சி வேட்பாளருக்கு எதிராக களமிறக்க தயாராகி வருவது கூட்டணி கட்சிகள் அதிர்ச்சிடைந்தனர்

புதுக்கோட்டையில் வாய்ப்புக்கிடைக்காத திமுகவினரின் அதிருப்தியை சமாளிக்க முடியாமல் கூட்டணி கட்சிகள் திணறி வருவதை திமுக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது, இதில் திமுகவினருடன் காங்கிரஸ் கட்சி நீண்ட் இழுபறி பேச்சுவார்தைக்கு பின்னர் 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்ப்பட்ட வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு எதிர்பார்த்திருந்த திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திமுகாவில் தொடர்ந்து சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் திரைமறைவில் சுயேட்சைகளை களம் இறக்குவதற்கான உள்ளடி வேலைகளை தொடங்கியுள்ளனர், இதனை உணர்ந்த காங்கிரஸ் கட்சியினர், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சுமூகமான நிலை ஏற்படட்செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு மாறிபோனதற்கு திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்சியினரை விமர்சனம் செய்வது போன்ற உள்ளடி வேலைகளால்தான், திமுக அந்த வார்டுகளில் போட்டியிட முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்தையின் போது கலந்து கொண்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை தங்களின் ஆதரவாளர்களுக்கு சீட்டு கேட்டு வலியுறுத்தியதால் எழுந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வாய்ப்புக்கிடைக்காத நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். அத்துடன் அதிருப்தி அடைந்த திமுகவினர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

திமுகாவில் தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, வாய்ப்புக்கிடைக்காத பலர் சுயேட்சையாக களம் இறங்க உள்ளதாக க்கூறப்படுகிறது. இதை அறிந்த பிற கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக்கும் நகர்வுகளை திரைமறைவில் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு