அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு
X
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மூட்டைகளை உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படாமல் இருந்ததால் விவசாயிகள் கொண்டுவந்து நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்தது.இதனால், நெல் மூட்டைகள் மழையிலும் வெயிலிலும் வெளியிலேயே கிடையாது வீணாகி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் .அதன்படி, இன்று முதல் நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டம், குளவாய்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மூட்டைகளை உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் நெல் கொள்முதல் பணிகளை பார்வையிட்டார். ஆய்வில் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



Tags

Next Story
நாமக்கல் அருகே முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்து..!