திருச்சி எம்பி தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு ,கண்காணிப்புக் குழுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம், மாவட்ட வளர்ச்சிஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தலைவர் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் கவிதா ராமு, முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள், சட்டமன்றஉறுப்பினர்கள் முத்துராஜா,சின்னத்துரை ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்குபின் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது;புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 38 திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.இக்குழுக் கூட்டம் இந்த வருடத்தின் 2வது குழுக் கூட்டமாகும்.ஏற்கெனவே கடந்த காலாண்டில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அரசின் திட்டங்கள் குறித்த கருத்துருக்கள் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மின்னனு தேசியவேளாண் சந்தை, பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், ஊரக மின்மயமாக்கல்திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ்யோஜனா, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட 38 திட்டப் பணிகள் விபரங்கள், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெறும் பணிகள், முடிவுற்றப் பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில், முன்னுரிமை அளித்து செயல்படுவதுடன், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர்மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu