தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய ஆர்ப்பாட்டம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதமர், இந்து கடவுள்களையும் இழிவாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியையும், இந்து கடவுள்களை இழிவாக பேசிய சார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு காளை சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சேதுபதி, மாவட்ட துணைத்தலைவர் ஏவிசி கணேசன், புதுக்கோட்டை நகர தலைவர் சுப்பிரமணியன், திருமயம் ஒன்றிய தலைவர் முருகேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!