பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு ஊழியர்சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டரைவழங்க வேண்டும்.பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தலைவர் ஜபருல்லா தலைமையில் அனைத்து துறை ஊழியர்சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்: 20 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டரை உடனடியாக வழங்க வேண்டும்.பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட 4 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்., சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரை முறைப்படுத்தவும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future ai robot technology