புகழேந்திக்கு நீதிவிசாரணை கேட்டு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே குண்டடிபட்டு இறந்துபோன சிறுவன் புகழேந்திக்கு நீதிவிசாரணை வேண்டும் என கேட்டு நடந்த ஆர்ப்பாட்டம் .
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலை பட்டியில் சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை மேற்கொண்ட போது எதிர்பாராதவிதமாக அருகில் தாத்தா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர் மேலும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சிறுவன் இறந்தார்.
இந்த நிலையில் சிறுவனின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிறுவனின் இறப்பிற்கு நீதிவிசாரணை வேண்டும் என புதுக்கோட்டை அண்ணா சிலையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ,சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா சிலையில் இறந்துபோனா சிறுவன் புகழேந்திக்கு நீதிவிசாரணை வேண்டும். நிரந்தரமாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu