புதுக்கோட்டையில் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி இளைஞர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்

புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து இளைஞர் அமைப்பு சார்பில் காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வசித்து வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த கஜா புயலின் போது அதன் படிக்கட்டுகள் கீழே விழுந்தது அதன்பிறகு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி படிகட்டுகள் இதுவரை சீர் செய்யப்படாமல் உள்ளது மேலும் படிக்கட்டுகள் இல்லாததால் கடந்த 4 வருடத்திற்கும் மேலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் பெரியார் நகர் பகுதியில் 15 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது பாதி பகுதிகளில் குடிநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வருவதால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக குடிநீர் வழங்க வேண்டும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீர் செய்து சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் நகர் பகுதி இளைஞர் அமைப்பு சார்பில் காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பொது மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story