முப்படை தளபதி மறைவு: சந்தப்பேட்டை பள்ளியில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

முப்படை தளபதி மறைவு: சந்தப்பேட்டை பள்ளியில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
X

புதுக்கோட்டை சந்தைபபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவ மாணவிகள்.

சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவ மாணவிகள்.

சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவ மாணவிகள்.

இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய ராணுவ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த பொழுது குன்னூர் அருகே எதிர்பாரதவிதமாக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது.

இதில் பயணித்த இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜய மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மறைந்த ராணுவ தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்தனர்.

Tags

Next Story
ai marketing future