பார்வையற்ற முதியவருக்கு உதவிய காவல்துறைக்கு குவியும் பாராட்டு
பார்வையிழந்த முதியவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற காவலர்.
காவல்துறை பணி என்பது பொது மக்களிடம் மிகுந்த நன் மதிப்பை ஏற்படுத்தும் பணியாக இருந்து வருகிறது. மேலும் தற்போது காவல்துறையினர் பொதுமக்களிடம் நண்பர்களாக பழகி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் தேவையில்லாமல் ஊரடங்கு மீறி வெளியே சுற்றிய பொதுமக்களிடம் காவல்துறையினர் அன்பாக பேசி வைரஸ் தொற்றை பற்றி எடுத்துக் கூறி பல்வேறு விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்தி வந்தனர்.
மேலும் அந்த ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையின் பணி மகத்தான பணியாக இருந்து வந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோகர்ணம் தலைமை காவலர் செல்வராஜ் மற்றும் திருக்கோகர்ணம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த பார்வையற்ற முதியவர் தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் மிகுந்த கஷ்டப்பட்டு சென்று கொண்டிருப்பதைப் பார்த்த திருக்கோகரணம் தலைமை காவலர் செல்வராஜ் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பார்வையற்ற முதியவரை சக காவல்துறை உதவியுடன் இருசக்கர வாகனத்தில் உட்காரவைத்து ராஜ கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதனைப் பார்த்த அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் பலர் காவல்துறையின் மனிதாபிமான செயலுக்கு மிகுந்த பாராட்டைப் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu