/* */

அரசு நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர்களை அழைப்பதில்லை கவுன்சிலர்கள் புகார்

மாவட்ட கவுன்சிலர்களுக்கு தகவல் அளிக்காவிட்டால் அதிகாரிகளின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்படும்

HIGHLIGHTS

அரசு நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர்களை  அழைப்பதில்லை கவுன்சிலர்கள் புகார்
X

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது 

அரசு நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் அழைப்பதில்லை கவுன்சிலர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொள்ளும் இயல்பு கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் லட்சுமி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 21 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொண்ட பல்வேறு தீர்மானம் குறித்த பொருள் வாசிக்கப்பட்டு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அதிமுக, திமுக, காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர்கள் நாங்கள் மக்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்றும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த அழைப்புகளும் வழங்குவதில்லை எந்த அரசு நிகழ்ச்சிக்கும் தங்களை அழைப்பதில்லை எனக் கூறினார்.



மேலும் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசியதாவது: நாங்கள் வெற்றி பெற்று இரண்டரை வருடம் முடிவடையும் தருவாயில் தங்கள் பகுதியில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் எங்களை அழைப்பதில்லை நாங்கள் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளான தங்களை மக்கள் காணமுடியவில்லை என நினைக்கும் நிலை உருவாகி வருகிறது. எனவே வருகின்ற காலங்களில் அரசு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கவுன்சிலர்களை அழைக்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவை செயல் அலுவலர் பிறப்பிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இனி வரும் காலங்களில் கண்டிப்பாக அரசு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட கவுன்சிலர்களுக்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் அதிகாரிகளின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி செயலாளர் லட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 March 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?