புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
புதுக்கோட்டை டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி நினைவு அரசு மருத்துவமனை பழைய வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி அரசு பழைய தலைமைமருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும்இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்றது.
கொரோனா விழிப்புணர்வு பிரசார கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்து, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 15 மருத்துவர்கள், 90 செவிலியர்கள், 20 பணியாளர்களுக்கு மருத்துவமனையில் பணிபுரியும் போது அணிந்து கொள்ளும் வகையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேட்ஜ்களையும்,பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில், கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், தனிமனித இடைவேளை கடைபிடிப்போம், முகக்கவசம் அணிந்து வெளியில் செல்வோம், தேவையில்லாமல் வெளியில் செல்ல மாட்டோம், என்ற விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர்ராமு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் கார்த்திக்தெய்வநாயகம், நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் செந்தில்குமார், இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை தலைவர் சலீம், செயலாளர் நவரெத்தினசாமி, பொருளாளர் மரம்ராஜா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu