ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
X
புதுக்கோட்டையில் ஆணழகன் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை யூஜின் ஜிம் அண்ட் பிட்னஸ்-ன் 59 ஆம் ஆண்டு விழா மற்றும் மாவட்ட அளவிலான மிஸ்டரி யூஜின் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா யூஜின் ஜிம் ஆசிரியர் கிருஷ்ணாமுனி தலைமையில் நடைபெற்றது.

மதுரை யூஜின் ஜிம் ஆசிரியர் தாஸ், அரசு ஒப்பந்தகாரர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக யோகா பயிற்சியாளர் செல்வராஜ், அரசு ஒப்பந்தகாரர் மோகன், அன்னை அபிராமி கல்லூரி தாளாளர் நிலா மணியம், ரியாஸ் அகமது, செந்தில் ஆகியோர்கலந்துகொண்டனர்.

முன்னதாகயூஜின் மூத்த உறுப்பினர் ஜனார்த்தனன் அனைவரையும் வரவேற்றார்.மூத்த உறுப்பினர் பரணி நன்றி கூறினார் பல்வேறு எடைப் பிரிவில் நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா 3 பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.மேலும் விழாவில் புதிய உடற்பயிற்சி கருவி துவக்கி வைக்கப்பட்டது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!