கல்லூரி மாணவிகள் தினமும் செய்திதாள்களை படிக்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

கல்லூரி மாணவிகள் தினமும் செய்திதாள்களை படிக்க வேண்டும்: ஆட்சியர்  வேண்டுகோள்
X

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடக்கி வைத்து பேசிய  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு 

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் பொழுதே என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்காக தயாராக வேண்டும்

கல்லூரி மாணவிகள் தினந்தோறும் செய்திதாள்களை படிக்க வேண்டும் ஆட்சியர் கவிதா ராமு வேண்டுகோள் விடுத்தார்.

புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவிகள் கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கலந்துகொண்டு புத்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் பொழுதே தாங்கள் என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்காக தயாராகிக் கொள்ள வேண்டும்.

மேலும் அரசு வேலை மட்டுமே வேலை என்று நினைத்துக்கொண்டு காத்திருக்கக்கூடாது. கல்லூரி படிப்பை முடித்து செல்லும் மாணவிகள் தொழில் தொடங்குவதற்கும் தயாராக வேண்டும். மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதற்கு மாணவிகள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தினந்தோறும் காலையில் செய்திதாள்களை படிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். எனவே இன்று நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மிகவும் முக்கியமானது இதனை மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தயாராக வேண்டும் என்றார் ஆட்சியர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் டீரினிட்டி பிளஸ் சோசியல் டிரஸ்ட் ஆலோசகர் பாஸ்கரன் புதுக்கோட்டை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல் முருகன், புதுக்கோட்டை மாவட்ட தொழில் மையத்தின் துணை இயக்குனர் மற்றும் பொது மேலாளர் திரிபுரசுந்தரி, முன்னோடி வங்கியின் மேலாளர் ரமேஷ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் குமரேசன், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!