மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது : கார்த்திக் சிதம்பரம்
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளரிடம் பேசுகையில் கூறியதாவது :
மோடி அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளது. மத்திய அரசு எந்த சட்டத்தை போட்டாலும் அதிகாரங்கள் அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்வதாகவே உள்ளது.
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அகில இந்திய சர்வீஸ் ஆக இருந்தாலும் மாநில அரசு பணிகளில் தான் சேருகின்றனர். இவர்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மத்திய அரசு அழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவு என்பது மிகவும் அபாயகரமானது.
இதனை அனைத்து மாநிலங்களும் சட்டரீதியாகவும் எதிர்க்க வேண்டும் அரசியல் ரீதியாகவும் எதிர்க்க வேண்டும் இது மிகவும் கண்டனத்துக்குரியது.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் இடப்பங்கீடு என்பது அந்தந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி நிர்வாகிகளுக்கும் நடைபெறும்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசு போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை செய்து கருத்து கூறும் போது இது போன்ற வழக்குகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் இது வரவேற்கத்தக்கது.
2006 ஆம் ஆண்டு என் மீது போடப்பட்ட வழக்கில் 2017ஆம் ஆண்டு எனது வீட்டில் சோதனை நடத்தி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திரபாலாஜி வழக்கில் விசாரணை செய்து கருத்து கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போன்று அப்போது என் வழக்கை விசாரணை செய்த நீதிபதி இருந்திருந்தால் என் மீது வழக்கு இருந்திருக்காது
மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மாநில அரசுகளின் உரிமையை பறித்து உரிமைகளை மத்திய அரசின் பிஎம் அலுவலத்திற்கு கொண்டு செல்கிறது கிருத்துவ பள்ளியில் படித்தவன் என்ற முறையில் எனது அனுபவத்தில் கிருத்துவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் செய்யும் முறை கடைப்பிடிக்கப்படுவது கிடையாது
இருந்தாலும் தஞ்சை மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்இந்த சம்பவத்துக்காக எல்லா கிருத்துவ பள்ளிகள் மீதும் சாயத்தை பூசுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
மாணவிகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை என்பது புதிதாக நடப்பது இல்லை காலம் காலமாக இது நடந்து வருகிறது. கடந்த காலங்களில் இல்லாதது போன்று தற்போது மாணவிகள் மற்றும் பெண்கள் துணிச்சலாக வெளியே வந்து தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது இது வரவேற்கத்தக்கது மாநில அளவில் புகார் அளிப்பதற்கு ஹெல்ப்லைன் நம்பர் வழங்கப்பட வேண்டும்.
தண்டனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் நம் வீட்டில் உள்ள ஆண்களுக்கு பெண்களை மதிக்கக் கற்றுத் தர வேண்டும் அது போன்று வளர்க்க வேண்டும. மேலும் சமுதாய ரீதியாக மாற்றங்களை கொண்டு வரவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu