புதுக்கோட்டையில் வாக்கு இயந்திரம் வைத்துள்ள பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமிரா ரிப்பேர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமிரா செயல்படவில்லை என திமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் இருந்து வருகிறது

தொடர்ந்து திமுக சார்பில் வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகள் மற்றும் முகவர்கள் சுழற்சி முறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக கல்லூரியிலேயே கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இன்று புதுக்கோட்டை அரசு கல்லூரி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தை பார்வையிட திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுபதி வருகை தந்தார் அவருடன் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் வருகை தந்தார்.

தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்வதற்கு வேட்பாளர் ரகுபதிக்கு மட்டும் உரிய அனுமதி அட்டை இருந்ததால் ஆனால் மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியனை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனடியாக தொலைபேசியில் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்த தகவலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் கூறியது அடுத்தும் காவல்துறையினர் அவரை உள்ளே மீண்டும் அனுமதிக்காததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து திருமயம் தொகுதி வேட்பாளர் ரகுபதி மட்டும் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா இருக்கும் அறைக்கு சென்று பார்வையிட்டார் அப்பொழுது வாக்கு பெட்டிகள் இருக்கும் அறைக்கு பின்புறம் உள்ள சிசிடிவி கேமரா ஒன்று செயல்படவில்லை அதனைப் பார்த்துவிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டபொழுது சிசிடி கேமரா தற்போது செயல்படவில்லை என கூறினார்கள்.

இதனை அடுத்து வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் அங்கே பதிவு செய்யப்படும் சிசிடிவி காட்சி அறைகளை பார்வையிட்ட பின் வெளியே வந்த திமுக திருமயம் தொகுதி வேட்பாளரும் திருமயம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தேவையில்லாமல் தேவையில்லாத ஆட்கள் செல்வதும் அதேபோல் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்குள் கண்டெய்னர் லாரிகள் செல்வதும் என சர்ச்சைகள் வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவாகியுள்ள வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது அறைகளுக்குச் சென்று பார்க்க முடியாத சூழ்நிலை இருந்து வருவதால் அறைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா அறைகளை சென்று பார்வையிட்டு அப்போது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பின்புறம் உள்ள சிசிடிவி கேமரா ஒன்று பழுதாகி உள்ளது

உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் ஏனென்றால் பின் பகுதியில் இருந்து யாரேனும் வந்து வாக்கு இயந்திரங்கள் தூக்கிச் செல்வதற்கு வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை வழிவகை செய்யும் உடனடியாக அந்த சிசிடிவி கேமராவை சரி செய்ய வேண்டும் இல்லாவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அவர் கூறினார்

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அரசு கல்லூரிக்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்