கேரளாவுக்கு மாடு கொண்டுசென்ற விவகாரம்: இரு தரப்பினரிடையே வாக்குவாதம்

கேரளாவுக்கு மாடு கொண்டுசென்ற விவகாரம்: இரு தரப்பினரிடையே   வாக்குவாதம்
X
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளை இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தியதால் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் பரபரப்பு
இந்து முன்னணி அமைப்பினருக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளை இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தியதால் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

புதுக்கோட்டையிலிருந்து கேரளாவிற்கு அடிமாட்டுக்கு கொண்டு சென்ற 60 மாடுகளை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில், அந்த மாடுகளை காவல்துறையினர் சந்தப்பேட்டையிலுள்ள சந்தையில் வைத்துச் சோதனை செய்வதற்காக எடுத்து வந்தபோது, இந்து முன்னணி அமைப்பினருக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் நகர காவல்நிலைய ஆய்வாளர் குருநாதன், கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் ஜாபர் தலைமையிலான போலீசார் இரண்டு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதிலிருந்து இரண்டு அமைப்பினரையும் அப்புறப்படுத்தினர்.கேரளாவிற்கு அடிமாட்டுக்கு கொண்டு சென்ற மாடுகளை இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தியதால் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சந்தைப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!