புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமினை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள் மற்றும் 6 வயதுக்கு மேற்பட்டோர்கான பூஸ்டர் டோஸ் போடுவதற்கான தடுப்பூசி முகாமினை நகர்மன்றத்தில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்து ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தவணையான பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடும் முகாமினை தமிழக முதல்வர் இன்று துவக்கி வைத்தார்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் காண மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடும் முகாமை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 2020 ஏப்ரல் 14 தேதிக்கு முன்னர் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ்க்கான தடுப்பூசி போடப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு பத்து லட்சம் பேர் தகுதி உடையவர்களாக உள்ளனர்.
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 85 சதவீதம் பேருக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 65 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு கண்டறிந்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழக அரசு மற்றும் நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே தடுப்பூசி போடும் முகாம் நடத்துவதற்கான முன் அறிவிப்பு செய்து அதன்படி ஒவ்வொரு ஊராட்சியிலும் முகாம்களை நடத்தி வருகிறோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுபட்டுள்ள 15 சதவீதம் பேருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu