அடப்பன்காரசத்திரத்தில் அங்கன்வாடிகான பூமி பூஜை நிகழ்ச்சி

அடப்பன்காரசத்திரத்தில் அங்கன்வாடிகான பூமி பூஜை நிகழ்ச்சி
X

அடப்பன்கார சத்திரம் பகுதியில் புதிய அங்கன்வாடிக்கான் பூமி பூஜையில் கலந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர் பாபு.

ரூ .9 லட்சம் மதிப்பீட்டில் அடப்பன்காரசத்திரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை 9Aநத்தம் பண்ணை ஊராட்சிக்குட்பட்ட அடப்பன்காரசத்திரம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று 9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பால்வாடி கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 9Aநத்தம்பண்ணை ஊராட்சி மன்றத் தலைவர் பாபு கலந்து கொண்டு பூமி பூஜையில் செங்கல் கற்களை எடுத்து வைத்து கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அடப்பன்காரசத்திரம் பகுதி பொதுமக்கள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!