புதுக்கோட்டையில் பெண் தொழில் முனைவோர் சார்பில் அழகு சாதன கண்காட்சி

புதுக்கோட்டையில்  பெண் தொழில் முனைவோர் சார்பில் அழகு சாதன கண்காட்சி
X

புதுக்கோட்டையில் மகளிர் தினத்தையொட்டி தொழில் முனைவோர் பெண்களால் நடத்தப்படும் அழகு சாதன கண்காட்சியை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா துவக்கிவத்தார்

புதுக்கோட்டையில் மகளிர் தினத்தையொட்டி தொழில் முனைவோர் பெண்களால் நடத்தப்படும் அழகு சாதன கண்காட்சி நடைபெற்றது

புதுக்கோட்டையில் மகளிர் தினத்தையொட்டி தொழில் முனைவோர் பெண்களால் நடத்தப்படும் அழகு சாதன கண்காட்சி நடைபெற்றது.

புதுக்கோட்டையில் தொழில் முனைவோர் பெண்களால் நடத்தப்படும் பெண்களுக்குத் தேவையான அழகு சாதன கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகின்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள விஜய் பேலஸ் திருமண மஹாலில் ஹிஜாபீஸ் டிரெண்ட்ஸ் சார்பில் மகளிர் தினத்தையொட்டி நடத்தப்படும் பெண்களுக்கான அழகு சாதன கண்காட்சி நேற்று தொடங்கியது.

விழாவில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை தீயணைப்பு மாவட்ட அதிகாரி பானுப்பிரியா, காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் மற்றும் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்து ராஜாவின் மனைவி ராஜகுமாரி, டாக்டர் சலீம், ஆக்ஸபோர்டு சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த கண்காட்சியில் ஆடை ரகங்கள், உணவு வகைகள், காஸ்மெட்டிக் பொருட்கள், ஆர்ட் கேலரி, ஆர்கானிக் பொருட்கள், ஹிஜாப், வால்ஸ், கைவினை பரிசுப்பொருட்கள், பேன்சி ஜுவல்லர்ஸ், பெயிண்டிங் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன இரண்டு நாட்களாக நடைபெற்ற கண்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஜாகிரா நசிர்,நிஷா மின்சாத் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கண்காட்சியை பார்வையிட வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் குழந்தைகளுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டு போட்டிகளும் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக மெஹந்தி போடப்படுகின்றது இக்கண்காட்சியை ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பார்த்துச் செல்கின்றனர். தாரகை, ஸ்ரீ புவனேஸ்வரி தங்க மாளிகை, நேச்சுரல்ஸ், கார்மெண்ட், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ், தொப்பி வாப்பா பிரியாணி, என் எம் பாலிடெக்னிக், டீம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மெர்லின் மார்பில் உள்ளிட்ட நிறுவனங்களின் குடும்பத்தினரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

Tags

Next Story