பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு
X

பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

பழுதடைந்த குடிநீர் குழாயை இரவு முழுவதும் விழித்திருந்து சரி செய்ய நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

புதுக்கோட்டை 9A நத்தம் பண்ணை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பாபு இருந்து வருகிறார் ஊராட்சியில் சிறப்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் பொது மக்கள் வீடுகள் தேடி கபசுரக் குடிநீர், முக கவசம் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வந்தார். இந்நிலையில் ஊராட்சி பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் மரத்தின் வேர் அடைத்து குடிநீர் வராமல் இருந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் பாபு நேற்று இரவு குழாயை சரி செய்ய வந்த தொழிலாளர்களுடன் விடிய விடிய கூடவே இருந்து குழாய் சரிசெய்யப்பட்டு தண்ணீர் வந்த பிறகு காலையில் வீடு திரும்பியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!