அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனு தாக்கல்

அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  மனு  தாக்கல்
X

அதிமுக கூட்டணியில் த.மா.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காஞ்சனா வேட்புமனு வழங்கினார்

அதிமுக கூட்டணியில் புதுக்கோட்டை நகராட்சி 30 வது வார்டில் தமாகா சார்பில் காஞ்சனாஆனந்தன் போட்டியிடுகிறார்

அதிமுக கூட்டணியில் த.மா.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகியவைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.கடந்த பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிக அளவில் தற்போது வேட்புமனுக்களை வழங்கி வருகின்றனர்.

மேலும் அதிமுக ,திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் சார்பில் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுக்கள் வழங்கி வருகின்றனர்.மேலும் தற்போது அதிமுக திமுக சார்பில் வேட்பு மனுக்கள் வழங்கியவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட த.மா.கா மற்றும் அ.தி.மு.க கூட்டணி சார்பில் 30வது வார்டில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆனந்தின் மனைவி காஞ்சனா புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 30வது வார்டீல் போட்டியி தேர்தல் அலுவலரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் மாநில விவாசாய அணித்தலைவர் துவார் ரெங்கராஜன் மாவட்ட த.மா.கா இளைஞரணித்தலைவர் திருப்பதி 30வது வட்ட அ.தி.முக செயலாளர் கணேசன் வட்டாரத் தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business