புதுக்கோட்டை மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கப்பட்டன

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கப்பட்டன
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் 70% பேருந்துகள் இயக்கப்பட்டது இதனால் பேருந்து   நிலையத்தில் வரிசை கட்டி நிற்கும்   பேருந்துகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய பொது வேலைநிறுத்தம் 28 மற்றும் 29 ஆம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் வேலை நிறுத்தம் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று வழக்கம் போல் ஒரு சில பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டது.

இதனால் நேற்று கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பேருந்து இல்லாமல் பாதிப்படைந்து வந்த நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்படாமல் தங்கள் பணிக்கு செல்வதற்கு உதவியாக இருந்தது.

பொது வேலை நிறுத்தம் காரணமாக நேற்று முழு வேலை நிறுத்தம் நடைபெற்ற நிலையில் இன்று ஆட்டோ பேருந்துகள் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணியினை செய்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!