27 சதவீத இடஒதுக்கீடு: நன்றி தெரிவித்து அமைச்சர்கள் நோட்டீஸ் வினியோகம்

27 சதவீத இடஒதுக்கீடு:  நன்றி தெரிவித்து  அமைச்சர்கள் நோட்டீஸ் வினியோகம்
X

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய அமைச்சர்கள்

பிற்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டப்போராட்டம் நடத்தி பெற்று தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது

மருத்துவக் கல்லூரி படிப்பில் மத்திய அரசின் இடங்களுக்கு பிற்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டப்போராட்டம் நடத்தி பெற்று தந்த தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன .

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் பாலு , வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சிவா, மாவட்டமாணவரணி அமைப்பாளர் முல்லை முபாரக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!