கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் : அங்கன்வாடி ஊழியர் சங்க பொதுச்செயலர் டெய்சி பேட்டி.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மூன்றாவது மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் டெய்சி
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மூன்றாவது மாநாடு இன்று சனிக்கிழமை துவங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை புதுக்கோட்டை உசிலங்குளம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மூன்றாவது மாவட்ட மாநாடு கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் பத்மா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் தனலட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் வரவேற்புரையாற்றினார்.
இந்த மாவட்ட மாநாட்டிற்கு துவக்க உரையாக சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் துவக்க உரையாற்றினார்.இதில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் பலர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் தங்களுடைய கோரிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட மூன்றாவது மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டெய்சி செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:.
சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேறவில்லை. நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
அதன்படி, தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நாங்களும் அமைச்சர்களை சந்தித்து அங்கன்வாடி பணியாளர் களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றித் தருவார் என நம்பிக்கையில் உள்ளோம். தமிழக முதல்வர் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஒரு லட்சம் பேரை திரட்டி அவருக்கு பாராட்டு விழா, மாநாடு நடத்தவும் தயாராக உள்ளோம் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu