போதை மாத்திரைகள் ,ஊசிகள் வைத்திருந்தவர் கைது

போதை மாத்திரைகள் ,ஊசிகள் வைத்திருந்தவர் கைது
X

புதுக்கோட்டையில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி வைத்திருந்ததாக காமராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன்(28) என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்த 10 போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து வெங்கடேஸ்வரனை நீீீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின் பேரில் அவரை திருமயம் கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை நகர் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்று வேறு யாரேனும் போதை மாத்திரைகள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும் சட்ட விரோதமாக மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்