அதிமுக சசிகலா பின்னால் சென்று விடும்-கார்த்தி சிதம்பரம்

அதிமுக சசிகலா பின்னால் சென்று விடும்-கார்த்தி சிதம்பரம்
X

ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா பின்னால் சென்று விடும் என புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவராக முன்னாள் எம்எல்ஏ., சுப்புராமை காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்ததையடுத்து புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சுப்புராமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், பொதுவாக பட்ஜெட் மக்களுக்கு விரோதமானது. சசிகலா தற்போது தான் வெளியே வந்துள்ளார். தற்போதோ அல்லது தேர்தல் தோல்விக்கு பின்னரோ ஒட்டுமொத்த அதிமுகவும் அவர் பின்னால் சென்று விடும்.திமுக-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்.

கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது, கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார், கடனை கொடுத்தவர்கள் தான் தள்ளுபடி செய்ய முடியும், தமிழக முதல்வர் கடனை தள்ளுபடி செய்கிறாரா அல்லது கடனை கட்டுகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும், மேலும் இதுபோன்ற தள்ளுபடி பெறும் பயனாளிகளுக்கு எதிர்காலத்தில் எந்த ஒரு வங்கி கடனும் சலுகைகளும் இல்லாமல் போய் விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!