சாலை ஓர தடுப்பில் கார் மோதி விபத்து

சாலை ஓர தடுப்பில் கார் மோதி விபத்து
X
தந்தை மற்றும் இரண்டு வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, காரில் பயணித்த 6 பேர் காயம்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருச்சி-ராமேஸ்வரம் சாலை ஓர தடுப்பில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காரில் பயணித்த 6 பேர் காயம், விபத்து குறித்து கீரனூர் போலீசார் விசாரணை.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பொக்கன்குளம் என்ற இடத்தில் சென்னை வேளச்சேரியிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற இனோவா கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் ராமன் மற்றும் அவரது 2 வயது குழந்தை ரட்சன் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த ராமனின் மனைவி ஜெயந்தி, அவரது உறவினர்கள் பாலையா, சிவகாமி, லட்சுமி, தர்வேஷ், நந்தினி உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து அருகே இருந்தவர்கள் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் விபத்துக்குள்ளான காரை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மீட்டு கீரனூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business