ராகுல் நிலை தான் மோடிக்கும் ஏற்படும்-பழனிமாணிக்கம்

ராகுல் நிலை தான் மோடிக்கும் ஏற்படும்-பழனிமாணிக்கம்
X

ராகுல்காந்தி தமிழை புகழ்ந்து பேசுவது போல் மோடியும் விரைவில் தமிழை புகழ்ந்து பேசுவார் என புதுக்கோட்டையில் பழனிமாணிக்கம் எம்.பி., கூறினார்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக எம்பி பழனிமாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:- மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் இந்தியிலேயே பெயர் வைத்து வருகின்றனர். இதனை அதிமுக அரசு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் வேடிக்கை பார்த்து வருகின்றது. ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்து இருந்தாலோ அல்லது தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்திருந்தால் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று எதிர்த்து இருந்திருப்பார்.

தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தி இந்தி மொழிதான் ஆட்சி மொழி என்று கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால் அவர் தற்போது தமிழ் மொழி கலாச்சாரம் அதன் பெருமை குறித்து பேசி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இதே நிலை மோடிக்கும் ஏற்படும் அப்படி அவருக்கு அந்த நிலை ஏற்பட வேண்டுமென்றால் தமிழக மக்கள் தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முல்லை முபாரக் தலைமை வகித்தார். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன், அரசு சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!